Tuesday, September 8, 2009

நினைத்தாலே இனிக்கும் - ஏம்பா சீக்கிரம் எடுத்து இருக்கலாம்ல?



     பதிவுலகத்துக்கு முதல்ல வணக்கம். இது என்னோட முதலாவது பதிவு. அதனால ஏதாச்சும் தப்பு இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அடுத்ததுல கரைக்ட் பண்ணிடுவோம்.

                 சமீபத்தில சன் பிக்சர்ஸ் வெளியிட்ட “ நினைத்தாலே இனிக்கும் “ எந்த காலேஜ்ல எடுத்ததுன்னு தெரியுமா?  திண்டுக்கல் – பழநி வழியில இருக்க P.S.N.A (பச்சேரி ஸ்ரீ நல்லங்காள் அம்மன்) பொறியியல் கல்லூரி. எப்படி தெரியும்னா நான் படிச்சது அங்கதான். 1984ல ஆரம்பிச்சாலும் காலேஜ்க்கு 2000ல தான் பெருமை வந்துச்சு (ஹி..ஹி..அப்போதான் நான் சேர்ந்தேன்). நான் இந்த காலேஜ தேர்ந்தெடுத்ததுக்கு ஒரு பெரிய கதையே இருக்கு. அத அப்புறமா பாக்கலாம். 2004ல பைனல் இயர் படிக்கறப்போ (நாங்களும் படிச்சோங்க) ஒரு சினிமா சூட்டிங் நடந்தது. படம்பேரு நியாபகமில்ல. சமூகசேவை புகழ் சகீலாவும் ஜெயா டிவி "காமடி பஜார்" புகழ் மாறனும் (ஒல்லியா இருப்பாருல்ல) நடிச்சு இருந்தாங்க. ஒரு குத்துபாட்டு காலேஜ் லைப்ரேரி வாசல்லயும் (என்ன கொடும சார் இது) சில காமெடி காட்சிகளையும் எடுத்தாங்க. டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் . எங்களோட ECE dept. ப்ளாக் (காலெஜ் கட்டிடம்) இருந்தது லைப்ரெரி பக்கத்துலதான். 


                 பாடம் எடுக்க வரும் எல்லா வாத்தியாரயும் பசங்க எல்லாரும்(நோட் தி பாயிண்ட் - பசங்க) 
  சார் சூட்டிங் நடக்குற சவுண்டுல ஒண்ணுமே கேக்கல, அதனால ப்ரீயாவிடுங்கன்னு சொல்லி அன்னிக்கு முழுசும் மொக்கதான். எனக்கு தெரிஞ்சு எங்க காலேஜ் லைப்ரெரி மாணவர்களால் நிறைஞ்சது(அவ்வளவு படிப்பாளி நாங்க) அன்னிக்கு தான். அப்பவே எங்களுக்குள்ள ஒரு தீர்மானம் பண்ணிகிட்டோம். படம் எவ்வளோ மொக்கயா இருந்தாலும், எந்த துச்சாபய நடிச்சிருந்தாலும் கண்டிப்பா படம் ரிலீஸ் ஆனவுடனே பாத்துறனும். ஆனா எங்க நல்லநேரம் அந்த படம் வந்தமாதிரி தெரியல. 


        என்னோட கோவம் எல்லாம், இந்த GNR. குமாரவேல் படத்த சீக்கிரமா 2004-குள்ள எடுத்திருந்தா தமிழ்சினிமாக்கு ஒரு இளம்புயல்(அட நான்தாங்க) கிடைச்சிருப்பாரு. இல்லன்னா அட்லீஸ்ட் ஒரு குரூப்புல நின்னாவது ஸ்கீன்ல வந்துருப்பேன். தமிழ்சினிமா கொடுத்துவச்சது அவ்வளவு தான். சரி விடுங்க. உங்களுக்காக PSNA exclusive படங்கள் என்னோட ஆல்பத்திலிருந்து. 




இது தான் 2001ல் திறக்கபட்ட மெஸ். ஸ்பெஷல் மீல்ஸ் போடுற அன்னிக்கு சின்ன கலவரம் நடக்கும்.




இது தாங்க ரெங்காலெட்சுமி ஆடிட்டோரியம். இதோட திறப்புவிழாக்கு வெங்கையா நாயுடு வந்திருந்தார். தெந்தமிழகத்துல இவ்ளோ வசதியுள்ள உலகத்தரமான அரங்கம் வேற ஏதுமில்லைன்னு சொல்ல்லாம்.




இதுதான் சிங்கங்களின் குகை(அதாங்க mens hostel). வசதிகள் நிறைய இல்லாட்டலும் we loved the hostel.  PG பசங்களுக்கு இப்போ புதுசா hostel கட்டியிருக்காங்க.






படத்துல இருக்கறது first year block. முதலாம் வருட வகுப்புகள் நடக்குற இடம். சினிமாலயும் இந்த block நிறைய வந்திருக்கு.






இதுதாங்க canteen. Mens hostel தவிர மத்த மூணு கட்டிடங்களும் 2000 - 2004 ல் கட்டப்பட்டவை.






கடைசியாக, Main block. கல்லூரியின் முதல் கட்டிடம். 


       தற்சமயம், மதுரைக்கு அருகில் தரமான கல்லூரியாக PSNA உருவெடுத்துள்ளது. பொறியியற் கலந்தாய்வில் இந்த கல்லூரியை நீங்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். PSNAக்கு நான் கியாரண்டி. மேலும் விபரங்களுக்கு,


http://www.psnacet.edu.in


                சரியோ தப்போ பேச்சு பேச்சாதான் இருக்கனும். உங்க கமெண்டுகள போடுங்க. ஆட்டோ எதுவும் அனுப்பிடாதீங்க. அப்புறம் ரொம்ப செலவாகிடும்..


2..ரெண்டு..2

விரல் நுனிகளின் ‘சத்த’சபை